Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.என். நிபோஜன் / 2018 ஜூன் 07 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைத்தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட செயக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரியில் இரணைமாதாநகர் எனும் கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவுக்கு படகுகளில் சென்று குடியேறிய மக்களுக்கு, மே மாதம் 15 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சினால் இரணைத்தீவில் குடியேறுவதுக்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு, 190 குடும்பங்கள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரணைத்தீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மக்களுக்கு இரணைமாதா நகரில் அரசின் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய பல உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு குடும்பத்துக்கு அரசின் வீட்டுத்திட்ட வீடு ஒரு தடவை மட்டுமே வழங்க முடியும் என்றும் மாவட்டச் செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் இரணைத்தீவில் குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களின் பிரச்சினையை விசேட பிரச்சினையாக கருத்தில் எடுத்து வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025