2025 மே 19, திங்கட்கிழமை

இரணைமடு நினைவுக்கல்லை நிறுவ ஆளுநர் உத்தரவு

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

இரணைமடுகுளத்தில் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார்.

இரணைமடு 1954ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டிருந்தது.

எனினும் தற்போது நினைவுக்கல் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தது. குறித்த நினைவுக்கல் அகற்றப்பட்டமை தொடர்பான செய்தி ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து விரைவாக குறித்த நினைவு கல்லை மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு ஆளுநர் பணித்துள்ளார். இதன் பணிகளை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X