Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா, எஸ்.ஜெகநாதன்
யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும், மத்திய அரசாங்கம், தொடர்ந்தும் வடக்கைத் தனது இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேயடி உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் வட மாகாண முதமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில், இன்று (11) நடைபெற்றது.
இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக வினவிய கனேடிய உயர்ஸ்தானிகர், அரசமைப்பைக் கொண்டு வந்தால் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே, முதமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதமைச்சர், 70 ஆண்டுகளாக பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தது எனக் குறிப்பிட்டார்.
“மத்திய அரசாங்கம், வடக்கை தமது கட்டுப்பாட்டுக்குள்தான் இன்றும் வைத்திருக்கின்றது. ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர், வடபகுதியில் உள்ளனர். அதேபோல சகல தரப்பினரும் எம்மை கட்டுப்படுத்தவே நினைக்கின்றனர். சட்டங்களும் எமக்கு எதிராக இருக்கின்றன.
"இவ்வாறான கட்டுப்பாட்டுக்கு மத்தியில், ஏதாவது அரசியல் ரீதியான விடயங்களைத் தீர்ப்பதென்பது கடினம்" என முதலமைச்சர் தெரிவித்தார்.
எனவே, அரசமைப்பை மிக விரைவில் உருவாக்கி, அந்த அரசமைப்பை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி நகர்த்தினால் மாத்திரமே, இந்த நாட்டின் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025