Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, முதலாவது கடமை விஜயத்தை, நேற்று (29) யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு மேற்கொண்டார்.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வரவேற்று, இராணுவத் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையை வழங்கினார்.
பின்பு, இராணுவத் தளபதியால், பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தினுள், மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவத் தளபதிக்கு, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தளபதியினால், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் இரண்டாவது கட்டமாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இராணுவ தளபதியுடன் இணைந்து இந்தப் பரிசுகளை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .