Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 நவம்பர் 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகளை முன்னெடுத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று, இன்று (26) காலை ஏற்பட்டிருந்தது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய படை முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து உள்ளமையால், துயிலும் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு அப்பால், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இன்று (26) முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, அவற்றைக் குழப்பும் விதமாக பவள் கவசவாகனம் மற்றும் இராணுவ பஸ்களின் மூலம் சிவில் உடையில் பல இராணுவத்தினர் அழைத்துவரப்பட்டு அவ்விடத்தில் குவிக்கப்பட்டனர்.
அவ்விடத்தில் சிவில் உடையில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் நிகழ்வு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களை தமது அலைபேசிகள் மற்றும் புகைப்படக் கருவிகள் ஊடாக, வீடியோ ஒளிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025