Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஜூலை 18 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த போர்க் காலத்தின் போது, 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், இயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு, இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள மண் அணைகளாலும் காவலரண்களாலும், ஆணையிறவு கடல் நீரேரிக்கும் சுண்டிக்குளம் கடலில் இருந்தான நீர் வரத்துக்களுக்கும், அதனோடு இணைந்ததான கடல் வளங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதனை நம்பி ஆணையிறவு நீரேரியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கச்சி பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தமது தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நம்பி வாழும் பல குடும்பங்கள், வறுமையில் வாடுவதாக, அம்மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைகளை ஆராய்வதற்காக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான த.குருகுலராஜா, அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத் தருவதாகவும் இராணுவத்தினர் அமைத்துள்ள மண்ணைகளையும் காவலரண்களையும் அகற்றி, இயக்கச்சி மீனவர்களுடைய ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் உரிய தரப்பினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்தக் களப் பயணத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன், உபதவிசாளர் மு.கயன், உறுப்பினர் த.ரமேஸ் ஆகியோருடன், இயக்கச்சி மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025