2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘இருக்கைக்கு ஏற்றவாறு ஏற்ற வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“பஸ்களில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் நிலையை உருவாக்குங்கள்” என, வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில், இன்று (26) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வடமாகணத்தில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பஸ்களில், இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்கின்றார்கள். அதனால் பயணிகள், பஸ் மிதிபலகைகளில் பயணம் செய்கின்றார்கள். இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் வகையில், பஸ் சேவைகள் இடம்பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் த. குருகுலராஜா,

“யாழ்.- கொழும்பு பஸ் சேவைகள், உரிய முறையில் நடைபெறுகின்றன. அதேபோல, ஏனைய மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ் சேவைக்கும் நடைபெற வேண்டும்” என்றார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த நான்கு வருடங்களாக, போக்குவரத்து அமைச்சை ஆளுங்கட்சி வைத்திருந்தும் நடவடிக்கை இல்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .