2025 மே 14, புதன்கிழமை

’இருவரில் ஒருவருக்கு தொற்றில்லை’

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரண்டு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதில், ஒருவர் கிருமி தொற்று இல்லை என்று, பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தவருக்கு ஆரம்பகட்ட  பரிசோதனையின்போது, அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அவருக்கு அடுத்த கட்ட பரிசோதனை முடிவு வரும் வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

அத்துடன், வடக்கில் இன்று வரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே,  மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X