Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
வடமாகாணத்துக்கு வெளியே ஒருவர் மரணித்தால், அவரது சடலத்தை வடமாகாணத்துக்குக் கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின், இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இந்த அனுமதியை வழங்குவதற்காக இறந்தவரின் விவரங்கள், இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலை அல்லது இடம் போன்ற விவரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றார்.
இதையடுத்து, குறிப்பிட்ட அதிகாரி, இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே அனுமதி வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
'கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அவ்வாறு இறப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால், மிக இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். உடல் மின்சார தகன இயந்திரத்திலேயே எரியூட்டப்பட வேண்டும்.
'சடலம் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு ஆகக் கூடியது 3 மணித்தியாலங்கள் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும். குடும்பத்தினர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்குபற்றலாம். அவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்' எனவும், கேதீஸ்வரன் கூறினார்.
எனவே, வேறு மாகாணத்தில் இறப்பு ஏற்பட்டு வடமாகாணத்தில் இறுதிச் சடங்கு நடாத்த விரும்பினால் முன்கூட்டியே சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னர், சடலத்தை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago