2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

இலக்க தகடற்ற காரில் ஹெரோயின் கடத்தியவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் திங்கட்கிழமை (27) இரவு கைது செய்யப்பட்டார்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 11 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .