2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மீது போத்தல் தாக்குதல்

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை, சாலையடி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது, கறுப்புத்துணியால் முகத்தை கட்டியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போத்தல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில், பஸ்ஸின் சாரதி இருக்கையின் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.

தொடர்ந்து பருத்தித்துறை சாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பிறிதொரு பஸ்ஸில், தாக்குதலுக்குள்ளான பஸ்ஸின் பயணிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X