Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
இலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, வடமாகாணத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட பின்னர் வடமாகாணத்தினுள் பதிவிலுள்ள வாகன உரிமையாளர்கள், வடமாகாணத்தின் எந்தப் பிரதேச செயலகங்களிலும் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டத்தின் கீழ் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் பதிவிலுள்ள வாகனங்களுக்குரிய வருமானவரி அனுமதிப்பத்திரங்களை வடமாகாணத்தில் வழங்க முடியாத நிலைமை உள்ளது.
அவ்வாறான வாகனங்களுக்கு அந்தந்த மாகாணங்களுக்குச் சென்று வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் ஏனைய மாகாணங்களின் பதிவிலுள்ள தமது வாகனங்களின் பதிவை விரைவாக வடமாகாணத்துக்கு மாற்றி, அம்மாகாணத்தில் தங்களுக்குரிய வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திப்படுத்துமாறு வடமாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago