2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இலவச மின்னிணைப்பு திட்டத்தில் பாரபட்சம்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் இலவச மின்னிணைப்பு திட்டத்துக்காக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், உரிய தகுதிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாத நிலையில் இத்தெரிவில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். ளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்;தீவு மாவட்டங்களில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இலவச மின்னிணைப்புக்கள், வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகள் கடந்த மே மாதம் 26ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டன. இதனால், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்;போது கிளிநொச்சி மாவட்டத்தில் 2000 குடும்பங்களுக்கான இலவச மின்னிணைப்புக்களை வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவுகள் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பயனாளிகள் தெரிவு, சமுர்த்தி உத்தியோகத்;தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாரிய முறைகேடுகளும் பாரபட்சங்களும் காட்டப்படுகின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் விசேட தேவையுடைய மற்றும் குடும்ப வருமானம் அற்ற பயனாளிகள் தெரிவு செய்யப்படாமல் பெருமளவான பயிர் செய்கை நிலங்களைக் கொண்ட மற்றும் வாகன உரிமையாளர்களின் குடும்பங்கள் என முறையற்ற விதத்தில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தவிர ஏனைய குடும்பங்கள் அதிக பணத்தினை செலுத்தியே தமக்கான மின்னிணைப்பைப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

குறித்த பயனாளிகள் சமுர்த்தி பயனாளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்ற போதும் சமுர்த்தி பயனாளிகள் முன்னைய ஆட்சிக்காலத்தில் அரசியல் நோக்கத்திற்காக அவசர அவசரமாக தெரிவு செய்யப்பட்ட முறையற்ற பயனாளிகள் தெரிவு ஆகும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X