Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 17 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலவசமாக நடாத்தப்பட்டு வரும் யோகா கற்கை நெறியின் புதிய பிரிவு எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புக்கள், நல்லூர் ஆலய முன்றலில் அமைந்துள்ள ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளன. ஆண்களுக்கான வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணி வரையிலும் பெண்களுக்கான வகுப்புக்கள் அதே நாட்களில் காலை 7.30 மணிதொடக்கம் 8.30 மணி வரையும் நடைபெறவுள்ளன. நோயாளர்களாயின் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 மாதங்கள் இடம்பெறவுள்ள இக்கற்கைநெறியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வகுப்புக்களில் இணைய விரும்புவோர், குறித்த நிலையத்தில் தமது பதிவுகளை கற்;கை நெறி ஆரம்பமாகும் தினத்தன்றோ அல்லது அதற்;கு முன்போ மேற்கொள்ள முடியும். மேலதிக தகவல்களை அலுவலக நேரத்தில் மேற்படி மண்டபத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago