Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மே 30 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்
கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் உள்ள 4ஆம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அது குறித்து தெரியவருவதாவது,
நேற்று (29) செவ்வாய்கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்துக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் சென்று, கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்கு வருகை தருமாறு கோரும் அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.
எனினும் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என எவருமில்லையென தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் .க.சர்வேஸ்வரனை சந்திக்க அனுமதித்துள்ளனர்.
எவரது ஒப்பமும் அற்று கைகளால் எழுதப்பட்டு, யாரால் எழுதப்பட்டது அல்லது யாருக்கு எழுதப்பட்டதென்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோ பிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றை கையளித்த அவர்கள் விசாரணையொன்றுக்காக, கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.
மொட்டைக்கடிதப்பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அமைச்சர், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று வடமாகாண பாடசாலைகளில் வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரி இருந்தார். அதற்கு தெற்கு அரசியல்வாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago