2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனுக்கு நாளை வரை விளக்கமறியல்

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தீவகப்பகுதிகளில் மேய்சலுக்கு கட்டப்படும் பசுமாடுகள், மற்றும் தென்மராட்சி பகுதிகளில் மேய்ச்சல் தரவைகளில் மேய்ச்சலுக்கு நிலங்களில் கட்டிவிடப்படும் மாடுகளை தொடர்ச்சியாக திருடி, இறைச்சியாக்கி வந்த திருகோணமலை பகுதியினை சேர்ந்த 23வயதுடைய நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.  ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பண்னை பகுதிக்குச் சென்ற பொலிஸார், வான் ஒன்றில் எடுத்து வரப்பட்ட 30 கிலோகிராம் மாட்டு இறைச்சியை கைப்பறினர்.

அதனைக் கொண்டு வந்த இளைஞனிடம் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின்னர் முரனான வகையில் பதில் அளித்துள்ளதுடன்,  மாடுகளை திருடி இறைச்சியாக்கியமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, இளைஞனை கைதுசெய்த பொலிஸார், யாழ். நீதவான்  வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X