2025 ஜூலை 23, புதன்கிழமை

இளைஞர்களை அறிவூட்டும் செயலமர்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுகாதார மற்றும் நன்நடத்தை ஊடாக அறிவூட்டும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றது.

இதில், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மது வரி திணைக்கள பொறுப்பதிகாரி ரி.நந்தகுமார், மன்னார் பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் வைத்திய அதிகாரி அன்ரன் சிசில் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலக இளைஞர் சேவை அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தொற்றாநோய்,போதைப்பொருள் பாவனை,எச்.ஐ.வி தொற்று ஆகியவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

குறித்த செயலமர்வில் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த சுமார் 250ற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .