2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும்

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற திட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென சிறுவர் விவகார இராஐhங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் கண்காட்சி நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. இவ் வேலைத் திட்டங்களின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலே முதன் முதலாக புதிதாக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் சிறந்ததொரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த காலங்களிலும் சரி இப்போதும் சரி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற எங்களுடைய உற்பத்திகளை வெளியே சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இங்குள்ள உற்பத்தியாளர்கள், விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் பலவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் இவற்றை சந்தைப்படுத்த முடியாது உள்ளனர்.

இதனால் அவர்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்பொது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இத் திட்டம் அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் என்பதுடன் தொழில் வாயப்புக்களையும் ஏற்படுத்தும்.
யுத்தத்திற்குப் பின்னர் வேலையில்லாமல் பட்டதாரிகள் உட்பட எத்தனையோ இளைஞர் யுவதிகள் இருக்கின்றனர்.

அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவத அவசியம். ஆகவே இந்த அரசாங்கமானது வடகிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும'; என்றார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X