Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - நல்லூர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மனைவி, இன்று (16) பள்ளம பொலிஸ் நிலையத்தில் தனது சேவையைப் பதிவு செய்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்குப் பாதுகாப்பு வழங்கிய போது, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்.
குறித்த பொலிஸ் சர்ஜன்டினது மனைவி, திருமணத்துக்கு முன்னர் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றியுள்ளார்.
இந்நிலையில், 2ஆவது குழந்தை பிறந்ததன் பின்னர், அவர் சேவையில் பதிவு செய்யாமையால், சேவையை கைவிட்டுச் சென்றதாகக் கருதப்பட்டார்.
இதையடுத்து, தனது கணவர் உயிரிழந்ததன் பின்னர், அவரை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
எனினும், இதுவரை அவருக்கு சீருடை கிடைக்காமையால், சிவில் உடையில் அவர் தனது சேவையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago