2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இளவாலை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

செல்வநாயகம் கபிலன்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளவாலை பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நூதனமுறையில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதால், பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்பாக செயற்படுமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது மழை பெய்து நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ள நிவாரணத்துக்கு உதவி வழங்குவதாகக் கூறி வரும் சிலர், வீடுகளுக்குள் பிரவேசித்து நூதனமுறையில் திருடி வருகின்றனர்.

இரு இளைஞர் குழுக்களாக வீடுகளுக்குள் வரும் இவர்கள் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களை தாக்கி விட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்தும் திருடியும் செல்கின்றனர்.

கடந்த வாரம், அம்மன் வீதி பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வயோதிபப் பெண்ணைத் தாக்கிய கொள்ளையர்கள் இருவர், அவர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

எனவே, இனந்தெரியாத நபர்கள் யாராவது வீடுகளுக்குள் நுழைந்தால், அவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவும். அவர்களின் நடத்தையில் சந்தேகம் இருந்தால், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், பகல் நேரத்தில் வீட்டின் வெளிக்கதவை பூட்டுவதுடன், உள் கதவையும் பூட்டிவிட்டு ஏனைய வேலைகளில் ஈடுபடுமாறும், பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .