Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கோப்பாய் இளைஞர் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து, இன்று (01) இடமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும் வகையில், யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவின பேரில், அந்த ஐவரும் வௌ;வேறு பொலிஸ் நிலையங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடந்த வியாழக்கிழமை வானில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று, இளைஞன் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்து, கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது.
இந்தச் சம்பவத்தில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளமை தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞனால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாட்சிகளில் தலையீடு செய்வதைத் தடுக்கும் வகையில்; உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago