2025 மே 10, சனிக்கிழமை

இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ், நிதர்ஷன், என்.ராஜ்

 

தென்மராட்சி – வரணி, இயற்றாலை பகுதியில், நேற்று  (25) மாலை, இளைஞன் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மகனே, இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வேலைக்கு சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பும் போது, சுட்டிபுரம் பகுதியில் 10 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் ஒன்று, பஸ்ஸை வழிமறித்து, அவ்விளைஞனைக் கடத்திச் சென்று, வாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞன், ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரும் இராணுவத்தினரும், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X