2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரணைமடுகுளம் புனரமைப்புக்கு முன் சுமார் 8500 ஏக்கர் வரை மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை தற்போது 15 ஆயிரம் ஏக்கராக   அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்று தொடக்கம் ஆறு ஏக்கர் வரை வயற்காணிகளை கொண்டவர்களுக்கு மூன்று ஏக்கரும், ஆறு தொடக்கம் எட்டு ஏக்கர் வரை நான்கு ஏக்கரும், எட்டு தொடக்கம் பத்து ஏக்கர் வரை ஐந்து ஏக்கரும், பத்து தொடக்கம் 15 ஏக்கர் வரை ஆறு ஏக்கரும், 15 தொடக்கம் 20 ஏக்கர் வரை ஏழு ஏக்கரும், இருபதுக்கு மேல் வயற்காணிகளை கொண்டவர்களுக்கு எட்டு ஏக்கரும் சிறுபோகம் நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு  இரணைமடுகுளத்திலிருந்து சிறுபோக நெற்செய்கைக்கு  நீர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை திறந்து விடப்படும் என்றும் மே மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் மூன்று அல்லது மூன்றரை மாதங்கள் கொண்ட சிபார்சு செய்யப்பட்ட நெல் இனங்களை விதைக்க வேண்டும் எனவும், கால்நடைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனவும் இன்றைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றையக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் என்.சுதாகரன், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் இராஜகோபு. விவசாய திணைக்களப் பிரதி பணிப்பாளர், கமநலசேவைகள் திணைக்கள அதிகாரிகள், மேலலதி அரசாங்க அதிபர் சத்தியசீலன். இரணைமடு கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .