Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன், தமிழ்த் தேசியப் பேரவை யாழ். மாநகர சபையைக் கைப்பற்றினால், அப்போதைய முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியைச் செலவிட்டு, தனது பயன்பாட்டுக்கு என கொள்வனது செய்யப்பட்ட வாகனத்தை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் ஏலத்தில் விற்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர வேட்பாளர்களை ஆதரித்து, அரியாலைப் பிரதேசத்தில், நேற்று (03) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“நாங்கள், எங்களது உரிமைப் போராட்டத்தை முன்கொண்டு செல்லாது கைவிடுவோமாக இருந்தால், நாங்கள் சிங்களவர்களாகவும் பௌத்தர்களாகவும் மாற்றப்படுவோம். எங்களைச் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல எங்களுடைய கலாசாரம், வாழ்வியல், பண்பாடு, பொருளாதாரம் என யாவற்றையும் அழிப்பதும் இன அழிப்புத்தான்.
“சிலாபம் பகுதியிலே இன்றும் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது. தமிழர்களாகிய அவர்கள், மெது மெதுவாக சிங்கள மொழி பேசுபவர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் முழுமையாக பௌத்த மயமாகிவிட்டார்கள். புத்தளத்திலும் அந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பிரதேசங்களில் ஓர் இன அழிப்பு நடந்துவிட்டது.
“அதேபோல, வடக்கு - கிழக்கிலும் வெகு விரைவாகச் செய்யதற்காக முனைப்புகள், எங்களது தலைமைகள் எனக் கூறிக்கொள்கின்ற தரப்புகளின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால், எங்களது உரிமைப் போராட்ட அரசியல் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட வேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரே தரப்பாக நாங்கள் காணப்படுகின்றோம்” எனத் தெவித்தார்.
21 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago