Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெப ரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தென் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதலில் மரணமடைந்த, பாதிப்படைந்த மக்களுக்கான இரண்டாவது ஆண்டு நிகழ்வு நாளை புதன்கிழமை 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம், கட்டுவப்பிட்டி செபஸ்தியார் தேவாலயம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் உல்லாச விடுதிகள் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலே நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டா ர்கள்;பலர் அங்கவீனமானார்கள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இதேவேளை,யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் விசேட ஆராதனை இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
2 hours ago
2 hours ago