2025 மே 03, சனிக்கிழமை

உடுவிலில் அடிக்கல் நாட்டல்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

புத்தசாசன அமைச்சின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டஜே 182 கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கலை,  யாழ். மாவட்டப் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் பிரியந்த பெரேரா, இன்று (07)   நாட்டிவைத்தார்.

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு,  நயினாதீவில் இரண்டு வீடுகளும் தெல்லிப்பழை மற்றும் உடுவிலில் ஆகிய பகுதிகளில் தலா ஒவ்வொரு வீடுமாக,  யாழ். மாவட்டத்தில் நான்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதியன்று, குறித்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த யாழ். மாவட்ட இராணுவத் தளபதி, இன்றைய தினம் மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி இருப்பதாகவும் அதில் ஒரு வீடுதான் உடுவில் பிரதேசத்தில் இன்று (நேற்று) அத்திபாரம் இடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, புத்தசாசன அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில், அவரின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலையகத்தின் ஏற்பாட்டில், வறுமைக் கோட்டுக்குட்பட்ட மூன்று குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே யாழ். மாவட்டத்தில், இராணுவத்தினரால் 744 வீடுகள் வறிய மக்களுக்கு கட்டிகொடுக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், அதேபோல மேலும் 10 வீடுகள் வீடுகள் விரைவில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளனவெனவும் கூறினார்.

அத்துடன், "இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் நெறிப்படுத்தலில், யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகத்தினரால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள், அதேபோல் கர்ப்பிணித் தாய்மாருக்கு உலர் உணவு பொதிகள் என்பன இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்படுகின்றன. 

"எனவே, தொடர்ச்சியாக இராணுவத்தினரால் வறிய மக்களுக்கான உதவித் திட்டங்கள் வடபகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" எனவும்,  பிரியந்த பெரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X