Janu / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (10) அன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றத்தினால் பரந்தன் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஐந்து பலசரக்கு கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நான்கு உணவகங்கள் இரண்டு வெதுப்பகங்களிற்கு 360000 தண்டப்பணம் விதித்ததுடன் 2 உணவகங்கள், 1 வெதுப்பகம் என்பன குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
அத்துடன் கண்டவளை பகுதியில் இரண்டு பலசரக்குகடைகளுக்கு 35000 தண்டப்பணமும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 1 பலசரக்கு கடைக்கு 10000 தண்டப்பணமும் 2 உணவகங்களுக்கு 125000 தண்டப்பணம் விதித்ததுடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக உணவகங்களை மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மு.தமிழ்ச்செல்வன்


2 hours ago
8 hours ago
11 Feb 2026
11 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
11 Feb 2026
11 Feb 2026