Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதும் மற்றும் உருவாக்கப்படவுள்ளதுமான உணவகமான அம்மாச்சி எனும் பெயரிலான உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது தொடர்பில் ஆராய்வதாக, விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையானது, கடந்த ஐந்து வருடங்களில் உருப்படியாகச் செய்த காரியம் அம்மாச்சி எனும் உணவகம் தான் என்று முகநூலில் ஒருவர் வெளிப்படுத்தியதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், உண்மையில் மத்திய அரசாங்கத்தின் நிதியில் மத்திய அரசாங்கத்தின் திட்டத்துக்கமையவே அந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதன் பெயரைத் தான் வடக்கு மாகாண சபை “அம்மாச்சி” என்று மாற்றி வைத்திருக்கின்றது. அதாவது, நாட்டிலுள்ள எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனையே, வடக்கில் “அம்மாச்சி” என்று பெயரை மாற்றி வைத்திருக்கின்றனர்.
அதற்காக தமிழ்ப் பிரதேசமான இங்கும் சிங்களப் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால் தமிழ்ப் பெயரையே வைக்க வேண்டும். அதற்காக இங்கு அம்மாச்சி என்று அந்த உணவகங்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்தும் அதே மாதிரியான பெயர்கள் தான் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
கோண்டாவிலில் இந்த உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25ஆம் திகதிக்குப் பின்னர் வைக்கலாம். அதே போன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கெல்லாம் அம்மாச்சி என்று தான் வைக்க வேண்டுமென்றில்லை. அவற்றை பாரம்பரிய உணவகங்கள் என்று போடலாம். அதிலும் பாரம்பரியம் மிக்க உணவகம் என்று போடுவது நல்ல பெயராக இருக்கும் என்றார்.
இதேவேளை, மத்திய அரசின் திட்டத்திற்கமைய மத்திய அரசாங்கத்தின் நிதியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் சிங்களப் பெயரைப் மாற்றியே அம்மாச்சி என்று வடக்கில் பெயரபலகை மட்டுமே மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டம் மாகாண சபையின் திட்டமல்ல. அது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .