2025 மே 21, புதன்கிழமை

உணவு உண்ட இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2018 ஜூன் 27 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

திருமண வீட்டில் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டுக்கு வந்த இளைஞன், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

அகிலகுமார் மிதவன் (வயது 26) என்ற இளைஞனே, இவ்வாறு உயிரழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்ற குறித்த இளைஞன், அங்கு மதிய உணவு உண்டுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டுக்குத் திரும்பிய குறித்த இளைஞனுக்கு, திடீர் மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரை கோப்பாய் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .