2025 மே 22, வியாழக்கிழமை

உணவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பவுள்ளது

Editorial   / 2018 மே 01 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் மாணவர்களின் உணவுத்தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 15 மில்லியன் ரூபாய் நிதி அரசுடைமையாக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த வாரம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற கணக்காய்வுக்குழு ஒன்று யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் கணக்காய்வு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இதன்போது பயன்படுத்தப்படாது, 15 மில்லியன் ரூபாய் நிதி இருப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாணவர்களின் உணவுத்தேவைக்காக அனுப்பப்பட்ட நிதி என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நிதியை அரசுடைமையாக்குவதுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.

ஒதுக்கப்பட்ட நிதி குறித்த காலப்பகுதிக்குள் பயன்படுத்தப்படாமையாலேயே திரும்பவுள்ளது என  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்வியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் விடுமுறைக்காலங்கள் தவிர்ந்த ஏனைய வேளைகளில் வெளியே சென்றுவர முடியாத நிலையில், கல்வியல் கல்லூரியில் வழங்கப்படுகின்ற உணவினையே உட்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X