2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘உதவிகளையும் வசதிகளையும் வழங்கவும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, யாழ். பல்கலைக்கழகப் பேரவையிடமும் துணைவேந்தரிடமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும், யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால், இன்று (20) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவ்வொன்றியத்தினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில், பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாததால், விடுதிகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்த மாணவர்கள், வெளியில் தங்கியிருந்ததாகவும் இந்நிலையில் தற்போது அதற்கான வாடகைகளைத் தீருமாறு உரிமையாளர்கள் கோருகின்றனரெனவும் ஒன்றியத்தினர் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழகத்தில் மிகவும் வறுமைப்பட்ட மாணவர்களே கல்வி கற்கின்ற நிலையில், இந்த வாடகைகத் தொகையைக் கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனரெனத் தெரிவித்த ஒன்றியத்தினர், இதற்கான தீர்வை சம்பந்தப்பட்டோர் வழங்க வேண்டுமென்றும் கோரினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .