Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
எதிர்வரும் காலத்தில், காரைநகரில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்போரின் உதவியைப் பெற்று, காரைநகர் மண்ணிலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
களபூமி விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் நடத்தும் காரைநகர் விளையாட்டுக்கழங்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுதொடர் பரிசளிப்பு நிகழ்வு, கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில், இன்று (06) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களபூமி விளையாட்டுக்கழகம் நடத்திய KPL 2020 சுற்றுப் போட்டியில், ஆரம்ப போட்டிகளில் வெற்றியீட்டி, இறுதிப் போட்டிக்கு, காரை சலஞ்சர்ஸ் அணியும் கோவளம் விளையாட்டுகழகமும் தெரிவாகின. இதில், கோவளம் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், காரைநகர் மண்ணில் 13 விளையாட்டு கழகங்கள் செயற்பட்டு வருகின்றனவெனவும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும்போது, காரைநகர் இளைஞர்கள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றதெனவும் கூறினார்..
தமது அரசாங்கத்தில், காரைநகர் வாழ் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் முகமாக, பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவித்த அவர், அதேபோல் எதிர்வரும் காலத்தில், காரைநகரில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்போரின் உதவியைப் பெற்று, காரைநகர் மண்ணிலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
எனவே, இளைஞர்கள் தேவையில்லாத விடயங்களில் கவனம் செலுத்தாது, விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதன் மூலம், சாதனைகளைப் படைக்க முடியுமெனவும், விஜயகலா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025