2025 மே 02, வெள்ளிக்கிழமை

உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை ஆரம்பம்

Freelancer   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கோணக்குளம் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு போராடும் நிலையில் காணப்பட்டது. 

இந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் வேலைகள், ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடந்த சில வாரங்களாக குறித்த யானை அப்பகுதிகளில் நடமாடி  வருவதாகவும், யானையின் காலில் காயங்கள் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும், குளக்கரை நீர் பகுதியில் குறித்த யானை படுத்திருப்பதாகவும் தெரிவித்த பொதுமக்கள், சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பல தடவைகள் அறிவித்தும் அவர்கள் வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர். 

இந்நிலையில், நேற்று (160 மாலை முதல் யானைக்கான சிகிச்சை இடம்பெற்று வருவதுடன் உணவு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவிக்கையில், வட மாகாணம் முழுவதுக்குமாக ஒரு வைத்தியரே இருப்பதாகவும் அதனாலேயே இந்த நிலை எனவும் இருப்பினும் அவர் நேற்று (16) வருகைதந்து சிகிச்சை அளித்ததாகவும் தாங்கள் உணவு கொடுத்து பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .