Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களுக்கு கொடுக்கவேண்டிய உரித்துக்களைக் கொடுங்கள். அதற்குப் பின்னர் கலப்புத் திருமணங்கள் நடத்தலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
9ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை, திங்கட்கிழமை (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
சாரணியர் ஆரம்பித்து 100 வருடங்கள் கடந்துள்ளன. அத்துடன், யாழ் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கை முழுவதிலும் இருந்து சாரணியர்களை அழைத்து வந்து நிகழ்வை நடத்துவது இது முக்கியமான நேரமாகும்.
அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள இளம் சாரணியர்கள் ஒன்றிணைந்து எதையும் சாதிக்க முடியும் என்று எடுத்துக்காட்டும் வகையில் சாரணியர் பாசறை நடைபெறுகின்றது.
சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாயின், சாரணியத்தின் குறிக்கோள்கள் எமக்கு முக்கியமானது என்றார்.
'வடமாகாண ஆளுநர் கலப்புத் திருமணங்கள் மிகவும் அவசியமென்று குறிப்பிட்டிருந்தார். கலப்பு திருமணத்தை எதிர்ப்பவன் நான் அல்ல. எனது இரு மகன்களும் சிங்கள இன பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள்.
அந்தவகையில், தமிழ் மக்களுடைய உரித்துக்களைக் கொடுங்கள். சட்டபூர்வமாக கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள். அதன்பின்னர் கலப்புத் திருமணங்கள் நடத்தலாம்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago