2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முத்துத்துரை சித்திராந்தன் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவரது உறவினர்கள் கொழும்பில் வசித்து வருகின்ற நிலையில், இது குறித்து அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X