2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

உறுதிப்பத்திரமின்றி சனசமூக நிலையக் கட்டடம்

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

மானிப்பாய், சுதுமலை நாமகள் சனசமூக நிலையக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ள காணி உறுதியற்றது. கட்டடம் அமைக்கப்பட்டது தொடர்பில் பிரதேச சபையில் அனுமதி பெறவில்லை. ஆகையால், எதிர்வரும் 7 நாட்களுக்குள் காணியின் உறுதிப்பத்திரம், நிலஅளவைப்படம் என்பவற்றின் மூலப்பிரதிகளை சபையில் சமர்பித்து உரிய அனுமதியைப் பெறுமாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையால் சனசமூக நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதுமலை வடக்கில் இயங்கி வந்த மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு கட்டடம் அமைப்பதற்கு மேற்படி பகுதியிலுள்ள காணியொன்றை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் தானமாக வழங்கினார்.

மாதர் சங்கம் காலப்போக்கில் இயங்காமல்போன நிலையில், அந்தக் கட்டடத்தில் நாமகள் சனசமூக நிலையம் இயங்கியது. இந்நிலையில் அரசாங்கத்தால் கிராமத்துக்கு 1 மில்லியன் அபிவிருத்தித் திட்டத்தில் சனசமூக நிலையத்துக்கு கிடைத்த 10 மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கொண்டு, மாதர் சங்கத்துக்கு பின்புறமாகவுள்ள காணியில் சனசமூக நிலையக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடமே அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பிரதேச சபையால் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X