2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உறவினர்களும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிதர்ஷ்ன்

கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நேற்று (12) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறனர்.

2019ஆம், 2020ஆம் ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி, மகசின் சிறைச்சாலையில் செப்டெம்பர் 06ஆம் திகதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்களும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்தனர்.

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய்”, “சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே” மற்றும் “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X