2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’உள்ளூர் பஸ் சேவையை அதிகரிக்க நடவடிக்கை’

Editorial   / 2020 மே 24 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், செவ்வாய்க்கிழமை (26) தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்றுகொண்டு பயணிகள் பயணம் செய்வதுத் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், எனவே, இது தொடர்பில் தனியார் போக்குவரத்து சபையினருடன் பேசவுள்ளதாகவும் கூறினார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். அத்துடன், தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது” என்றார்.

மேலும், கோவில்கள், மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.

அத்துடன், “உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. எனினும், அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல. அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும்” எனவும், மகேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X