2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

உழுது கொண்டிருந்த பஸ் சாரதி மின்னல் தாக்கி பலி

Niroshini   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன், என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி - நாவற்காட்டு பகுதியில், இன்று (02) பிற்பகல், வயலில் உழுது கொண்டிருந்தவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 41) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

அச்சுவேலி வடக்கை பிறப்பிடமாக கொண்ட இவர், இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை பஸ் சாரதியாக பணியாற்றுபவர் எனவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .