Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்நிதர்ஷன்
இலங்கையானது பெரும் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயக் கட்டத்தை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனத் தெரிவித்த புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல், இதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் பட்டினிச் சாவுகளை எதிர்கொள்ளும்அபாய நிலைக்குத் தள்ளப்படுவர் எனவும் கூறினார்
அவர், இன்று (23) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இன்றைய மோசமான விலை உயர்வுகளாலும் பொருட்களின் தட்டுப்பாடுகளாலும்பாதிக்கப்பட்டுவரும் உழைக்கும் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி நம்புகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்சியாளரின் மக்கள் விரோதப்போக்கினைத் தட்டிக் கேட்கவும் தடுத்து நிறுத்தவும் மக்களின் ஒன்றுபட்ட போராட்ட அணிதிரள்வினால் மாத்திரமே முடியும் என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் பெயரால் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியைப் பல தில்லுமுல்லுகள் மத்தியில் முன்னெடுத்து வந்த அதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி, அவற்றை நாட்டு மக்களின் தலைகளில்சுமத்தினர் எனத் தெரிவித்துள்ள அவர், அதன் விளைவே அரிசி, சீனி, கோதுமை மா, தானிய வகைகள், பால்மா, மருந்துகள் என்பனவற்றுடன் மரக்கறிகள், மீன், இறைச்சி போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலைகள்மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"தாறுமாறான இவ்விலை அதிகரிப்பால் மீண்டும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் பலமடங்கு உயர்த்தப்படும் நிலை தோன்றியுள்ளது. அத்துடன், போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்த்தப்படும். இவை அனைத்தும் பற்றாக்குறைகளாகவும், கடன்களாகவும் சாதாரண உழைக்கும் மக்களின் தலைகளிலேயேசுமத்தப்படும்.
"அதேவேளை, நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கும் சமூக நெருக்கடிகளுக்கும் இன, மத, பிரதேச பிளவுகளுக்கும் காரணமான ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்துவந்த அனைத்து ஆளும் வர்க்கசக்திகளும் எவ்வித பாதிப்புகளும் இன்றி சுகபோகமாகவே இருந்து வருகிறன. இத்தகையவர்கள் ஆளும்தரப்புகளாக இருந்துவந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் குறுக்கு வழிகளில் சேர்த்த பல்லாயிரம் கோடி டொலர்கள் இன்றைய அந்நியக் கடன்களை மீளச் செலுத்தவும் டொலர் கையிருப்புக்கும் போதுமானதாகும்.
"எனவே, உழைக்கும் மக்களின் கைகளுக்கு அதிகாரம் வரக்கூடியதாக, மக்கள் சார்பான பரந்துபட்ட சக்திகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதையே சரியான தீர்வுக்கான வழியாக எமது கட்சி வலியுறுத்துகிறது" எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago