2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

“யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார்.

 

யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 1,198,000 துபாய் திர்ஹம் மோசடி செய்ததாகவும், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பில், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு, யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர்.

இதையடுத்தே, இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .