Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கை நடத்தி வரும் ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வவுனியா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
117 நீதவான்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க நீதிச் சேவை ஆணைக்குழுவால் இந்த இடமாற்றமானது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்துக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புங்குடுதீவு மாணவியின் வழக்கு, நீதவான் லெனின்குமார் முன்னிலையில் திங்கட்கிழமையே (28) இறுதியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அடுத்த வழக்கு விசாரணை, புதிய நீதவான் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025