Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூன் 13 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் வசித்து வரும் மக்களில், 519 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட இந்தப் பிரதேச செயலகப் பிரிவில், தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள், தடுப்பில் இருந்து விடுதலையானோர் என 519 குடும்பங்கள் அண்மையில் மீள்குடியமர்ந்துள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வீடுகள் அற்ற நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக எழுவைதீவு, சூரியவத்தை, மெலிஞ்சிமுனை, சம்பாட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த நிரந்தர வீடுகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .