2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

’ஊரடங்கு நீங்கியதால் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு’

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கொரோனா வைரஸ் அபாய காலப்பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஊடரங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், வடக்கு கடல்மார்க்கம் ஊடாக போதைப்பொருள் கடத்தல் செயற்பாடு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

காங்கேசன்துறை கடற்படை தளத்தில், இன்று (08) யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களைச் சினேகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு, கடற்படையினரும் கடலோரக் காவற்படையினரும் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனரென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X