2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஊரணி மீன்பிடி துறைமுக பகுதிகள் மக்களிளுக்கு விடுவிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன், எஸ்.ஜெகநாதன்

 

யாழ்ப்பாணம் வலி வடக்கில், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த ஊரணி மீன்பிடித் துறைமுக பகுதிகள், சனிக்கிழமை, மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில், யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த ஊரணி மீன்பிடி துறைமுக பகுதிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையின் அங்கிகாரத்துடன், கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14ஆம் திகதி வரை, நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, வலிவடக்கில் இருந்த மக்கள், தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து, தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வலி வடக்கில் மக்கள் பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்தப்பட்டிருந்துடன் மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும், மீள குடியமர்ந்த மக்கள், தமது தொழில்களை செய்வதற்கான நிலங்கள் மற்றும் தமது மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கான மயிலிட்டி, ஊரணி ஆகிய துறைமுக பகுதிகளும்  விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X