2026 ஜனவரி 07, புதன்கிழமை

எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்

Janu   / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்  இவ் கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகள் அறிவித்துள்ளது.

இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்கி நீராடுவதை காணக்கூடியதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (4) அன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகள் மது போதையில் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று நீராடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர் 

இதனை அவதானித்த ஊர் மக்கள் கடலின் தன்மை தொடர்பாக அவர்களுக்கு கூறிய போதும் அதை செவிமடுக்காமல் நீராடியுள்ளனர் 

இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸூக்கு அறிவித்த போது அவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளிடம் கூறிச் சென்றுள்ளார் 

வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலா  பயணிகளே,  உங்கள் கவனத்திற்கு... 

·         மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன

·         பொலிஸார் மற்றும் கடற்தொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை மார்கழி தை மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும்

·         தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

·         தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் மற்றும் உங்கள் பாதுகாப்பு கருதி புகைப்படங்கள் எடுக்கும் போது ஆழமான பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .