Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று, இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். எவரும் முதலமைச்சராகலாம். ஆனால், எவர் முதலமைச்சரானாலும், தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது” என்று, வடமாகாணசபை உறுப்பினரும் மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சரும் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவள விழாவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும், நேற்று (28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினருக்கும், ஒவ்வொரு வருடமும் 60 இலட்சம் ரூபாய், குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கப்படுகிறது. இந்நிதியில் இருந்துதான் கட்டுமான உதவிகளைக் கேட்டுவரும் சனசமூக நிலையங்களுக்கும் வாழ்வாதாரம் கேட்டுவரும் பொதுமக்களுக்கும் உதவிகளைச் செய்து வருகிறோம். ஆனால், இந்தக் குறைந்தளவு நிதியில், உதவி கோருபவர்களின் தேவையை, முழுமையாக எங்களால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அதுமாத்திரம் அல்ல, இந்தக் குறைந்தளவு தொகையைக்கூட, நாங்கள் விரும்பியதுபோன்று எங்களால் வழங்க முடியாமல் உள்ளது.
“எனக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு மாணவிக்கு, 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு சைக்கிளை வழங்கியிருந்தேன். அந்த மாணவியின் வறுமை நிலையை எடுத்துச் சொல்லி, அவருக்கு உதவி செய்யுமாறு கிராமசேவையாளர் ஒருவர், எனக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த மாணவி, நன்றாகப் படிக்கும் மாணவி என்று அதிபரின் பரிந்துரை இல்லாமல் நான் சைக்கிளை வழங்கியது தவறு என்று, கணக்காய்வுக்குழு, எங்களிடம் விளக்கம் கேட்டது.
“பாடசாலையில் வழங்கப்படும் மதிய உணவுதான், வறிய அந்த மாணவிக்கு ஒரு நாளில் கிடைக்கக்கூடிய சத்துணவு. பாடசாலை சென்றால்தான் ஒருவேளை உணவும், அந்த மாணவிக்குக் கிடைக்கும். அதனால்தான் நான் அந்த மாணவிக்கு, சைக்கிளை வழங்கினேன். வடக்கு மாகாணசபையின் கையாலாகாத நிலையை விளக்குவதற்கு, இந்த ஓர் உதாரணமே போதும்.
“மத்திய அரசாங்கத்தின் சுற்றுநிருபத்துக்குச் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே, முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் உள்ளோமே தவிர, சுயமாக நாம் எதனையும் செய்ய முடியாதவர்களாகவே உள்ளோம். எனினும், எங்கள் சக்திக்கு மீறிப் பல பணிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். இதனைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாததுபோல் அரசியல் காரணங்களுக்காக, வடக்கு மாகாணசபை வினைத்திறன் அற்றது என்ற குற்றச்சாட்டுகளைப் பலர் முன்வைத்து வருகிறார்கள்.
“வடக்கு மாகாணசபை, சுயாதீனமாகத் தொழிற்டக்கூடியவாறு அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படாதவரை, மாகாணசபையால் சிறப்பாக இயங்க முடியாது. முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும், பெயரளவுக்குத்தான் என்பதுதான் யதார்த்தம்” என்றார்.
51 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025