2025 ஜூலை 19, சனிக்கிழமை

எனக்கு ஒன்றும் தெரியாது

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X