2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’எம்மை அடையாளம் கண்டுவிட்டார்கள்’

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இப்பொழுது எமது கூட்டணியை, ஒரு மாற்றணி என்று அடையாளம் காணத் தொடங்கிவிட்டார்களென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், உரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில், நேற்று (11) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது நடவடிக்கைகளை நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டினூடாக வெளிப்படையாக முன் கொண்டு செல்வதே உசிதமாகும் என்பதே எமது கருத்தெனவும் தனிமனித உழைப்பை நம்பியிராது, அறிவார்ந்தோரின் கூட்டான முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் கூறினார்.

“நான் உங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவேன், வேலை தருவேன் என்று பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டேன். ஆனால் எனது நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் இவற்றையெல்லாம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” எனவும், விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழ் மக்களின் கூட்டு முயற்சிதான் தமக்கான விடிவைப் பெற்றுத் தரப் போகின்றதெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X