Freelancer / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் எரிபொருளை பதுக்கிய குற்றச்சாட்டில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 1,590 லீற்றர் டீசலினை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கனரக இயந்திரங்கள் , உளவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் என்பவற்றை வைத்து பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த வழக்கை பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதாகிய சந்தேக நபரையும் , சான்று பொருட்களையும் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். (R)
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago